மனோ கணேசனுக்கு எதிராக இன்று போராட்டம்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எம்.பி க்கு எதிராக மலையகத்தில் ஐந்து இடங்களில் இன்று (07) காலை போராட்டங்கள் நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மனித்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மூன்று மாவட்டங்களில் ஐந்து பிரதான நகரங்களில் இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டக்கலை நகரில் விநாயகர் ஆலயத்திற்கு முன் காலை 10 மணிக்கும் மற்றும் பொகவந்தலாவை நகரில் மாலை 02 மணிக்கும் இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி காவத்தை நகரத்தில் காலை 10 மணிக்கும், கேகாலை தெஹியோவிட்ட நகரில் காலை 10 மணிக்கும் இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது.
ஊவா மாகாணத்தில் பதுளை நகரத்திலும், மனோகணேஷன் எம்.பிக்கு எதிரான இந்த எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
1. Kotagala – Vinayagar Kovil at 10:00am
2. Bogawanthalawa – Town at 02:00pm
3. Ratnapaura – Khawatha Town at 10:00am
4. Kegalla – Dehiowita,chinnakuriyana
5. Badulla –
*Hon.Minister Jeevan Thondaman’s Media Unit*