அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

அரிய வகை வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

மாரவில பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின் போது மிகவும் அரிய வகை வலம்புரி சங்கை விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர்  நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வலம்புரி சங்கு, 01 கிலோ 105 கிராம் எடையுடையதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாரவில பகுதியைச் சேர்ந்த 24 வயதானவர் என தெரியவந்துள்ளது. மேலதிக விசாரணைகளுக்காக அவர் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )