16 வகையான பூச்சியினங்களை சாப்பிட அனுமதி

16 வகையான பூச்சியினங்களை சாப்பிட அனுமதி

பூச்சிகளை மனிதர்கள் உணவாக உட்கொள்ள சிங்கப்பூர் அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள், புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவுக் கழகம் (எஸ்.எப்.ஏ) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த உணவுகள் சீன மற்றும் இந்திய உணவுகள் உட்பட உலகளாவிய உணவுகளின் சர்வதேச புகழ்பெற்ற மெனுவில் சேர்க்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பூச்சிகளில் பல்வேறு வகையான வெட்டுக்கிளிகள், புழுக்கள் மற்றும் பட்டுப்புழுக்கள் ஆகியவை அடங்கும். இந்த பூச்சிகள் கடல் உணவுகள், உப்பு கலந்த முட்டை, நண்டு போன்றவற்றில் சேர்க்கப்படும்.

30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதிக தைரியத்துடனும், ஆர்வத்துடனும் முன்வந்து இந்த வகை உணவுகளை வாங்கிச் சாப்பிடுவதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )