உக்ரைனுக்கு ஆயுதங்களை குவிக்க ஜோ பைடன் உறுதி

உக்ரைனுக்கு ஆயுதங்களை குவிக்க ஜோ பைடன் உறுதி

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைனுக்குக் கூடுதல் வான் பாதுகாப்பு ஆயுதங்களை வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

நேட்டோ கூட்டணியின் 75ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வொஷிங்டனில் உச்சநிலைச் சந்திப்பு நடைபெறுகிறது.

அதில் ஆரம்ப உரையாற்றிய பைடன், அமெரிக்காவுடன் ஜெர்மனி, நெதர்லாந்து, ருமேனியா, இத்தாலி ஆகிய 4 நட்பு நாடுகளும் பட்ரொயிட் ரக ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதத் தொகுதியை உக்ரைனுக்கு வழங்கவிருப்பதாக உறுதி கூறினார்.

இன்னும் சில மாதங்களுக்குப் பின் அமெரிக்கா கூடுதல் வான் பாதுகாப்பு ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ளது. பிரிட்டன், கனடா, நார்வே,ஸ்பெயின் ஆகியவையும் சேர்ந்து ஆயுதங்கள் வழங்கும்.

உக்ரைனிய அதிகாரிகள் நேற்று தான் கூடுதல் வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தேவைப்படுவதாகக் கேட்டுக்கொண்டனர்.

ரஷ்யா அண்மையில் நடத்திய தாக்குதலில் சிறார் மருத்துவமனை ஒன்று பாதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை உக்ரைனின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்ட சரமாரி தாக்குதல்களில் சுமார் 43 பேர் கொல்லப்பட்டனர் .

இதற்கு பொறுப்பேற்க ரஷ்யா மறுத்தபோதும் இது ரஷ்யா பாய்ச்சிய ஏவுகணைகளாக இருக்க அதிக சாத்தியம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி, மேற்குலக நட்பு நாடுகளிடம் பல மாதங்களாக வான் பாதுகாப்பு ஆயுதங்களை கோரி வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )