இலங்கையில் பொருளாதார சுதந்திரம் தொடர்ந்தும் பின்னடைவு !
இலங்கையின் பொருளாதாரம் மீளெழுச்சி பெற்றுவருவதாக கூறப்படுகின்ற போதிலும், பொருளாதார சுதந்திரத்தில் இலங்கை தொடர்ந்தும் பின்னடைவை எதிர்கொள்வதாக சர்வதேச ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
இதன்படி, இலங்கையின் பொருளாதார சுதந்திர மதிப்பெண் 49.2 ஆக காணப்படுகின்ற நிலையில், பொருளாதார சுதந்திர சுட்டியில் 149ஆவது இடத்தில் இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீடு கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 மதிப்பெண்களினால் குறைவடைந்துள்ளது.
மேலும், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள 39 நாடுகளில் இலங்கை
34 ஆவது இடத்தில் காணப்படுகின்றது.
இந்த நிலையில், பொருளாதார சுதந்திரத்தில் இலங்கை
தொடர்ந்தும் பின்னடைவைச் சந்தித்து வருவது சர்வதேச ஆய்வு அறிக்கையின்படி தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிவரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொருளாதார சுதந்திரத்தை அமுல்படுத்தா விட்டால் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை நோக்கி நகர முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2000 ஆம் ஆண்டு பொருளாதார சுதந்திரத்தில் 95 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, 2023 ஆம் ஆண்டு 149 ஆவது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளமையினை ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுவதாகவும் பேராசிரியர் வசந்த அத்துக்
கோரள தெரிவித்துளளார்.