அமரன் ரிலீஸ் திகதி தொடர்பில் அறிவிப்பு !

அமரன் ரிலீஸ் திகதி தொடர்பில் அறிவிப்பு !

நடிகர் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி கூட்டணியில் உருவாகியுள்ள அமரன் ரிலீஸ் திகதி குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

படத்தில் இராணுவ வீரராக சிவகார்த்திகேயன் முதல் முறையாக நடித்துள்ளார்.

அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், புதன்கிழமை இந்த படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )