ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கக் காட்டுப் பூனை !

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கக் காட்டுப் பூனை !

உரிய அனுமதியின்றி இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தாக கருதப்படும் ஆபிரிக்க காட்டுப் பூனையொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சரக்கு முனையத்தின் சுங்க அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் காட்டுப் பூனை இலங்கையில் காணப்படும் சிறுத்தையை ஒத்ததாக கருதப்படுகிறது.

குறித்த விலங்குகள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுவதாகவும், அதனால் சர்வதேசரீதியில் இவற்றுக்கு அதிக கேள்வி நிலவுவதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கண்டியைச் சேர்ந்த நபர் ஒருவரினால் இந்தக் காட்டுப்பூனை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த காட்டுப் பூனை தெஹிவளை தேசிய மிருகக்காட்சிச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை சுங்கத்தின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய பாதுகாப்பு பிரிவு மற்றும் வன விலங்கு பாதுகாப்புத் திணைக்களம் இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )