தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் எப்போது ?

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் எப்போது ?

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பெப்ரவரி மாதம் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள விஜய், சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை என்பதையும் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படவில்லை .

இந் நிலையில், தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )