அரிசியின் விலை குறைவடையும் !

அரிசியின் விலை குறைவடையும் !

மின் கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள், அதன் பயன்களை நுகர்வோருக்கு வழங்க தீர்மானித்துள்ளனர்.

நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க இது தொடர்பாக தெரிவிக்கையில், கைத்தொழில் துறையினருக்கு மின்கட்டணம் 25 வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமான பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க தமது சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தார்.

புதிய மின் கட்டண திருத்தத்தின் மூலம் அரிசி உற்பத்திச் செலவு குறைக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்திற்குள் அதன் பலன்கள் நுகர்வோருக்கு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘210 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு கிலோநாட்டு அரிசியின் விலை 195 ரூபா அல்லது 200 ரூபாவிற்கும் குறைவான விலையில் நுகர்வோருக்கு வழங்கக்கூடியதாக
இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்சாரக் கட்டணம் மேலும் குறைக்கப்பட்டால், எதிர்காலத்தில் அதன் பலன்கள் வாடிக்கையாளர்களுக்குக் வழங்கப்படும் ‘ என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, கீரி சம்பா விலையை மாபியா கட்டுப்படுத்திவருவதாக தெரியவந்துள்ளது.

தற்போது நெல் அறுவடை கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நெல்லின் விலை படிப்படியாகக் குறைந்து வருவதாகவும் சங்கத்தின் தலைவர் யு.கே.
சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

அதற்கமைவாக நாடு, சம்பா மற்றும் கீரி சம்பா முதலான நெல் கொள்முதல் சம விலையில் இடம்பெறுவதாகவும், கீரி சம்பா, சம்பா நெல் கொள்வனவு ரூபா 110க்கும் 109க்கும் இடையில் வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இதற்கு விளக்கமளிக்கும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள், சந்தையில் கீரி சம்பா அரிசியின் விலை இன்னும் ரூ. 350க்கு மேல் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை தலையிட வேண்டும் என சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே. சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

சந்தையில் ஒரு கிலோ கீரி சம்பா விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச விலையாக 260 ரூபா கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும் ,அதன் பலன் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை என சங்கம் மேலும் தெரிவித்துள்ளது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )