தேர்தலில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த பைடன்

தேர்தலில் இருந்து விலகியது குறித்து மனம் திறந்த பைடன்

இந்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுவதாக தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த 21-ந் திகதி அறிவித்திருந்தார்.

இந் நிலையில், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகியது குறித்து ஜோ பைடன்;

“அமெரிக்காவை ஒன்றிணைக்க புதிய தலைமுறைக்கு இடம்கொடுப்பதே சிறந்த வழி என எண்ணி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 6 மாதங்கள் ஒரு ஜனாதிபதியாக எனது பணியை செய்வதில் கவனம் செலுத்துவேன். வெறுப்பு, தீவிரவாதங்களுக்கு எதிராக குரல் கொடுப்பேன். எந்த வன்முறைக்கும் அமெரிக்காவில் இடமில்லை. அமெரிக்கா வலுவாகவும், பாதுகாப்பாகவும், சுதந்திர உலகின் தலைவராகவும் உள்ளது.

கமலா ஹாரிஸ் மிகவும் திறமையானவர். அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். துணை ஜனாதிபதியாக தேசத்தை வழிநடத்துவதில் சிறந்த பங்களிப்பை வழங்கியவர். இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவின் எதிர்காலத்தை மக்கள் தேர்ந்தெடுக்க உள்ளனர். எனது விருப்பத்தை தெரிவித்தேன். இப்போது தேர்வு அமெரிக்க மக்களுடையது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )