நன்மை செய்யும் நடைப்பயிற்சி
நாளுக்கு நாள் நோய்கள் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், அதனைக் குறைப்பதற்கு நாம் ஏதேனும் முயற்சி எடுப்பதே சிறந்தது.
அந்த வகையில் பல நோய்களை துரத்தவல்லது நடைப்பயிற்சி என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒரு நாளைக்கு சுமார் 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்பாக இருப்பதுடன் மரபணுக்கள் மாற்றமும் சரியாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.
பெரும்பாலானோர் அவர்களுக்கே தெரியாமல் இனிப்பு பொருட்களை அதிகம் சாப்பிடுவார்கள். இது காலப்போக்கில் நீரிழிவு நோயை ஏற்படுத்தும்.
ஆண்,பெண் என எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் கீழ்வாதம் அனைவரையும் பாதிக்கிறது.
இதற்கு வாரந்தோறும் 5 முதல் 6 மைல்கள் நடைபயிற்சி செய்தால் கீழ்வாதத்திலிருந்து குணமாகலாம்.
நாம் எவ்வளவு தூரம் நடக்கின்றோமோ அவ்வளவு தூரம் மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவடையும்.
நடைப்பயிற்சி நோயெதிர்ப்பு செயற்பாட்டை மேம்படுத்துகிறது எனலாம்.
அதுமட்டுமின்றி கவலை, சோகம், சோர்வு போன்றவற்றை தடுத்து புத்துணர்ச்சி தரும் ஒரு விடயமாக நடைப்பயிற்சி உள்ளது.