தேநீர் குடித்தால் தலைவலி சரியாகுமா ?

தேநீர் குடித்தால் தலைவலி சரியாகுமா ?

கொஞ்சம் தலைவலியாக இருக்கிறது. ஒரு கப் டீ குடித்தால்தான் சரியாகும் என்பதுதான் பலரின் நம்பிக்கையாக இருக்கிறது.

உண்மையில் டீ குடித்தால் தலைவலி சரியாகுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?

தேநீரில், க்ரீன் டீ, இஞ்சி டீ, எலுமிச்சை டீ போன்றவை சில நேரங்களில் உடலுக்கு நன்மைகளைப் பெற்றுத் தந்திருக்கலாம்.

தலைவலி பிரச்சினைக்கும் தேநீருக்கும் இடையில் நேரடி தொடர்பு எதுவும் இல்லை. ஆனால், நீரிழப்பு தலைவலியை தூண்டும் என்பதால் நீரேற்றத்துக்கு தேநீர் உதவலாம்.

தேநீர் சைனஸை குறைக்கும். சைனசிடிசால் உண்டாகும் தலைவலியிருந்து நிவாரணம் அளிக்கும். சில வகையான தேநீரில் கொஃபின் உள்ளது. இது தலைவலிக்கு தீர்வாக அமையும்.

தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள் ஆளுக்காள் வேறுபடும்.

அதேபோல் இஞ்சி தேநீர் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்கும்.

அதேபோல் தேநீர் குடிப்பதனால் தலைவலி ஏற்படும் எனக் கூறுபவர்களும் இருக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )