இலங்கையில் விவாகரத்துகள் அதிகரிப்பு

இலங்கையில் விவாகரத்துகள் அதிகரிப்பு

இலங்கையில் ஒரு நாளைக்கு 400க்கும் மேற்பட்ட விவாகரத்து இடம்
பெறுவதாக அம்பாறை மாவட்டஉளவளத்துணை இணைப்பாளர் மனூஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள்ஆகியோர்களை இலக்காக கொண்டுநடாத்திய ‘மனித மனதை புரிந்துகொள்வோம்’ எனும் தலைப்பிலான இலவச உளவியல் செயலமர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (28 ) அட்டாளைச்சேனை ஜும்மா பள்ளிவாசல் கலாசார மண்டபத்தில் நடை பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற் கண்டவாறு
தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், சமகாலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமற்ற தன்மை, குடும்பமற்றும் சமூக கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக நிறைய உளசமூக பிரச்சினைகள்ஏற்படுகின்றன.

இதனை சீர் செய்யவதற்கு ஒவ்வொருவரும் மனது தொடர்பாக அறிந்து கொள்ள
வேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களின் நடத்தைகளை புரிந்து கொள்ள முடியும். உள்ளம் தொடர்பாக அறிந்திருத்தல் இன்றைய காலப்பகுதியில் அத்தியாவசியமான ஒன்றாகும்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் உளப் பாதிப்பின் தாக்கமும் அதிகரித்து வருகின்றது, உள சமூக பிரச்சினைகளுக்கான தலையீடு இன்றி அமையாது. சமூக
நிறுவனங ்கள ை த் தாண்டி ஒவ்வொரு குடும்ப அலகிற்கும் ஒவ்வொரு ஆற்றுப்படுத்துனர் தேவை.

உள்ளம் தொடர்பான கற்கை நெறியினை கற்பது அவசியம், பொது நிர்வாக அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் தொலைதூர கற்கைகள் நிலையத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்ற ஒருவருட உளவளத்துணை டிப்ளோமா பாடநெறி எமது கிழக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.

இதனூடாக இப்பிராந்தியத்தின் ஒவ்வொருவரும் ஏதோவொருவகையில் பிரயோசனமடைய வேண்டும் என்றார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )