எரிபொருள் விநியோகம் தடையின்றி தொடரும் !
நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகம் தொடரும்
என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,
‘அனைத்துப் பொருள்களின் கையிருப்பையும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பராமரிப்பதால், தடைகளற்ற எரிபொருள் விநியோகம்
இடம்பெறும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வருடாந்த பராமரிப்பு மற்றும் சேவைக்கு உட்பட்ட சுத்திகரிப்பு நிலையம் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் அதன் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கும் என்றும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Reviewed the fuel cargo plan for the next 6 months, stock availability, storage capacity, distribution plan, placement of orders and refinery operations with the CPC management yesterday.
— Kanchana Wijesekera (@kanchana_wij) August 1, 2024
The CPC maintains a buffer stock of all products and will continue an uninterrupted supply… pic.twitter.com/zP6ukFLL9A