பிரதமரின் ஆதரவு ஜனாதிபதிக்கு !
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மஹாஜன எக்சத் பெரமுன தீர்மானித்துள்ளது.
மஹாஜன எக்சத் பெரமுனவின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் மஹரகமவில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கூடியபோது இத்தீர்மானம் எட்டப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது.