மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக யார் ? வெளியான முக்கிய அறிவிப்பு !
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கவுள்ளது.
இது தொடர்பான பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் தாமரை தடாகத்தில் எதிர்வரும் எதிர்வரும் 7ஆம் திகதி காலை 09 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதன்படி பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை இந்த வாரத்திற்கு முன்னர் அறிவிக்கத் தயாராக இருந்த போதிலும், நிலவும் சூழ்நிலை காரணமாக அது தாமதமானது.
ஜனாதிபதி வேட்பாளராக காத்திருக்கும் நால்வர் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற நிலையில் அவர்களில் பெரும்பாலானோர் தம்மிக்க பெரேராவுக்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன