அவல் லட்டு சுலபமாக செய்யலாம்
லட்டில் பல வகை உண்டு. பூந்தி லட்டு, ரவை லட்டு, அவல் லட்டு. இதில் பெரும்பான்மையானோருக்கு அவல் லட்டு எவ்வாறு செய்வதெனத் தெரியாது.
இனி அவல் லட்டு எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- அவல் – 2 கப்
- பால் – 1 மேசைக்கரண்டி
- தேங்காய் துருவல் – 1/4 கப்
- நாட்டு சர்க்கரை – 1 கப்
- நெய் – 1/4 கப்
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
- பாதாம் – 10
- முந்திரி – 10
- திராட்சை – 10
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் ஊற்ற வேண்டும்.
நெய்யில் அவல் சேர்த்து நிறம் மாறும் வரையில் வறுக்க வேண்டும்.
அவல் சூடானதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ளவும்.
தேங்காய்த் துருவலை வாணலியில் சேர்த்து இலேசாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பாதாம், முந்திரி, திராட்சை ஆகியவற்றையும் நெய்யில் வறுத்துக்கொள்ள வேண்டும்.
பொடித்த அவலுடன் வறுத்த தேங்காயையும் சேர்த்து அரைத்து, நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின் பொடித்த அவல், தேங்காய் பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு இலேசாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக தேவையான அளவு நெய், பால் சேர்த்து உருண்டைகளாக பிடிக்க வேண்டும்.