பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவசர அழைப்பு !

பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவசர அழைப்பு !

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ குறித்த அழைப்பை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி பொதுஜன பெரமுனவின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைப்பாளர்களும் இன்று (07) நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் கூடவுள்ளனர்.

இதன்போது சமகால அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )