கெஹலிய ரம்புக்வெல்லவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

கெஹலிய ரம்புக்வெல்லவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுத் தொடர்பான வழக்கு நிறைவடையும் வரை தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (09) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மீதான விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்படி, குறித்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, தம்மைப் பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பிலும் அன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )