சிரியாவில் மீண்டும் நிலநடுக்கம்!
சிரியாவில் உள்ள ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி இருக்கிறது.
இது 3.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சிரியா நாட்டின் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 11:56 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஹமா மட்டுமின்றி சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் 3.7 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது