ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப் பதிவு
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பல இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 500 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், ஜூலை 19ஆம் திகதி டாக்காவின் முகமதுபூர் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடை உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொலைக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, உள்ளிட்ட 6 பேரும் காரணம் என மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், ஷேக் ஹசீனா பதவியை இராஜிநாமா செய்துவிட்டு நாட்டை விட்டுவெளியேறியப் பிறகு அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
CATEGORIES World News