நாமலை மக்கள் தூக்கி வீசுவார்கள் !

நாமலை மக்கள் தூக்கி வீசுவார்கள் !

கோட்டபய ராஜபக்ஷவுக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் மக் கள், ராஜபக்ஷர்கள் குடும்பம் மீது வைராக்கியத்துடன் உள்ளார்கள். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 3 சதவீத வாக்குகளைப் பெறுவது கூட பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்குச் சவாலானது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சர்வஜன கட்சியின் காரியாலயத்தில்நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்
.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை 39 பேர் போட்டியிடுகின்றார்கள். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் சகாக்களாகவே ஒரு தரப்பினர் போட்டியிடுகின்றார்கள்.

கட்டுப்பணம் வைப்பிலிடும் தொகை குறைவானதால் எவ்வித வரையறைகளும் இல்லாமல் பலர் போட்டியிடுகின்றார்கள்.

1981ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கட்டுப்பணம்தான் இன்றும் அமுலில் உள்ளது.

பொருளாதாரப் பாதிப்புக்குப் பின்னர் வாழ்க்கைச் செலவுகள் பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பண தொகை அதிகரிக்கப்படவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் ஓர் ஆசனத்தைக் கூட கைப்பற்றாத அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகப் போட்டியிடுகின்றன.

ஆகவே, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் போட்டியிடும்போது அதற்கான வரையறைகள் அரசமைப்பு ஊடாக விதிக்கப்பட வேண்டும்.

மறுபுறம் சுயேச்சை வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை ஒரு கோடியாக அதிகரிக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் யார் முன்னிலையில் உள்ளார்கள் என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் 22 சதவீத வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை இதுவரை தீர்மானிக்கவில்லை.

இவர்களை இலக்காகக் கொண்டு பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

69 இலட்சம் மக்கள் ஆணை ராஜபக்ஷக்களின் குடும்பச் சொத்து அல்ல.

சுபீட்சமான எதிர்காலக் கொள்கைத் திட்டத்துக்காகவே 69 இலட்சம் மக்கள் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கினார்கள்.

சுபீட்சமான கொள்கையைச் செயற்படுத்துவதை விடுத்து கோட்டாபய ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ – ஜூலிசங் கொள்கையைச் செயற்படுத்தினார்.

இதனால் நாட்டு மக்கள் அவரை விரட்டியடித்தார்கள்.

69 இலட்சம் மக்கள் ராஜபக்ஷர்கள் மீது வைராக்கியத்துடன் உள்ளார்கள்.

ஆகவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ 3 சதவீத வாக்குகளைப் பெறுவது கூட சவால்மிக்கது. 97 சதவீதமான மக்கள் நாமலைத் தூக்கி வீசுவார்கள்.’என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )