அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு

அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு

அஜித் குமாரின் 62 ஆவது திரைப்படமான விடாமுயற்சி படத்தை. மகிழ்த்திருமேனி இயக்கியுள்ளார் இத்திரைபடத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் திரிஷா,அர்ஜூன், ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, பிரியா பவானி சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

குறித்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது படக்குழு புதிய போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். நடிகர்கள் கணேஷ் சரவணன் மற்றும் தசரதி ஆகியோரின் முதல் தோற்றம் அதில் வெளியாகியுள்ளது.

அஜித் விடாமுயற்சி படத்தைத்தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் `குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )