தேர்தலில் வென்றால் எலான் மஸ்க்கிற்கு மந்திரி பதவி

தேர்தலில் வென்றால் எலான் மஸ்க்கிற்கு மந்திரி பதவி

அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

ஆளும் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

இதற்கிடையில் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரும், ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப்-ஐ கடந்த ஓகஸ்ட் 13 அன்று நேர்காணல் செய்தார். இந்த நேர்காணல் எக்ஸ் தளத்தின் ஸ்பேசஸில் நடைபெற்றது.

இந் நிலையில், தான் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க் மந்திரி சபையில் ஒரு பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவேன் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாகவும் டிரம்ப் ஜனாதிபதியானால் வெள்ளை மாளிகை ஆலோசகராக எலான் மஸ்க் இருக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் எலான் மஸ்க் அதை முற்றிலும் மறுத்திருந்தார். இந்த நிலையில் தான் டிரம்ப் பொது வெளியில் இதுகுறித்து வெளிப்படையாகவே தற்போது பேசியுள்ளார்.

2008 -2012 காலகட்டம் வரை பராக் ஒபாமாவுக்கு, 2016 இல் ஹிலாரி கிளிண்டனுக்கும், 2020 இல் ஜோ பைடனுக்கும், தற்போது 2024 இல் டிரம்புக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எலான் மஸ்க் எடுத்துள்ளது குறிப்பிடதக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )