ஸ்ட்ரோபெர்ரி மில்க் ஷேக்
பழங்களிலேயே தனித்துவமான சுவையைக் கொண்டது ஸ்ட்ரோபெர்ரி. ஸ்ட்ரோபெர்ரியில் சூப்பரான மில்க் ஷேக் எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- ஸ்ட்ரோபெர்ரி – 1 கப்
- குளிர்ந்த பால் – 1 கப்
- சீனி – 5 தேக்கரண்டி
- ஐஸ்கட்டி – தேவையேற்படின்
- ஐஸ்க்ரீம் – தேவையேற்படின்
செய்முறை
ஸ்ட்ரோபெர்ரி மற்றும் சீனியைச் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த கலவை ஒரு பேஸ்ட் போல் வரும். அதனை ஒரு டம்ளர் குளிர்ந்த பாலில் கலந்தால் ஸ்ட்ரோபெர்ரி மில்க் ஷேக் ரெடி.
தேவையெனில் ஐஸ்க்ரீம் அல்லது ஐஸ்கட்டிகளை சேர்த்துக்கொள்ளலாம்.