தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் யதார்த்தமற்றது !

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் யதார்த்தமற்றது !

தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வறுமை நாடு கஷ்டமான வாழ்க்கை என்ற பாதையில் பயணிக்கும் விடயங்களையே, வெளியிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர்,அரசியல் கட்சிகளின் நாட்டை முன்னோக்கி செல்லும் கொள்கையை பார்ப்பதற்கு மக்கள் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரகடனம் யதார்த்தமற்ற வாழ்த்துப் பொதிமட்டுமே.

அதனைத் தெரிவிப்பதற்கும் கவலையாக உள்ளது. அவர்கள் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

அதில் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தப்படாத விடயங்கள் உள்ளனவா என நான் பார்த்தேன்.

அவ்வாறு எதுவும் கிடையாது. அந்தளவு அதனை அவர்கள் பிரதிபண்ணியுள்ளார்கள். ஏனையவர்களுடையதை, தம்முடையதைப் போல காட்ட முற்படும் அளவுக்கு
ஜேவிபி வங்குரோத்து நிலைக்கு ஆளாகியது.

ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.அவர்களின் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தில்
தற்போது நாம் நடைமுறைப்படுத்தும் அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளன .

உலகில் அனைத்து நாடுகளும் எதிர்பார்ப்பது பொருளாதாரத்தில் பலமடைந்து சிறந்த வாழ்வாதாரத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை ஏற்படுத்துவதையே .

அந்தவகையில் தற்போது சிறந்த வாழ்க்கையை, சிறந்த நாட்டை உருவாக்குவதற்கு முயற்சிப்பது இந்த நாட்டை முழுமையாக பொருளாதாரத்தில் அழிவை ஏற்படுத்திய குழுவினரே.

1971 ஆம் ஆண்டு முதல் மக்கள் முன்னேறுவதற்கோ அல்லது சிறந்த பொருளாதாரத்து
டனான நாட்டைக் கட்டி யெழுப்புவதற்கோ ஜே.வி. பி. இடம ளிக்கவில்லை.

வீழ்ச்சியடைந்த பொருளாதார நிலையை உருவாக்குவதற்கே அவர்கள் பங்களிப்பு செய்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு நாடு முழுமையாக பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த பின்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ், நாம் சர்வதேச நாணய நிதியத்துடன் மறுசீரமைப்பு வேலைத் திட்டத்தை ஆரம்பித்து கடன் வழங்குநர்களுடன் கடனை வழங்கக்கூடிய விதத்தில் நிபந்தனைகளுடன் இணைக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம்.

அந்த வகையில் 1971, 1988, 1989 யுகம் போன்றே 2022 ஆம் ஆண்டில் போராட்டக் காலத்தில் பொருளாதாரத்தை அழிவுறச் செய்வதற்கு உச்சளவில் செயல்பட்டவர்கள் இவர்களே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )