பெருந்தோட்ட நிறுவனங்களின் பொறுப்பற்றதனத்தால் ஏற்படும் உயிரிழப்புக்களை அனுமதிக்க முடியாது

பெருந்தோட்ட நிறுவனங்களின் பொறுப்பற்றதனத்தால் ஏற்படும் உயிரிழப்புக்களை அனுமதிக்க முடியாது

பெருந்தோட்ட நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பாவனைக்கு உதவாத உழவு இயந்திரங்கள் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருவதாக வும், இது போன்றதொரு துயரச் சம்பவம் இவ்வாண்டும் பதிவாகியுள்ளதாக தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் இதுபோன்ற விடயங்களில் அசமந்தப் போக்குடன் நடந்துகொள்ளும் செயற்பாட்டை கைவிடவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிவித்த அவர்,

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட பூனாகலை, உடயன பகுதியில் கொழுந்து ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் பள்ளத்தில்விழுந்து விபத்துக்
குள்ளானதில் அதில்பயணித்த 54 வயதுடைய தொழிலாளியொருவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இதன் சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக தோட்ட முகாமைத்துவத்துடனும் பொலிஸாருடனும் தொடர்பு கொண்டு உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானமை தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.

தோட்டப் பகுதிகளில் பாவனைக்கு உதவாத இயந்திரங்களை பயன்படுத்துவதால் தொழிலாளர்களின் பாதுகாப்பு தொழில் சட்டம் என்பன கேள்விக்குறியாகியுள்ளது.

இதனை இப்படியே விட்டுவிட முடியாது. வேலைத்தளங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் தோட்ட நிர்வாகத்தையே சாரும்.

எனவே இது தொடர்பில் தோட்டக் கம்பனிகள்பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )