முகத்தில் பரு தொல்லையா ? தினமும் வாழைப்பழத் தோலை இப்படி பயன்படுத்துங்க !
முகப்பருக்கான காரணத்தைப் பொருட்படுத்தாமல், அதை அகற்றுவது ஒரு முக்கியமான வேலையாகும்.
முகப்பருவை அகற்ற வாழைப்பழத் தோல் உதவுகின்றது.
இந்த இயற்கையான பொருளை முகப்பருக்கள் உள்ள சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சருமத்தை அதன் அழகிய, முகப்பரு இல்லாத நிறத்திற்கு மீட்டெடுக்க முடியும்.
அதனால் முகப்பருவைத் தடுக்க வாழைப்பழத் தோல் எவ்வாறு உதவுகிறது என்பதைக் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளுங்கள்.
வாழைப்பழத்தோலின் உட்புறத்தை முகத்தில் தடவி மெதுவாக தேய்க்கவும்.
தேய்க்கும் போது வாழைப்பழத் தோல் கருமையாக மாறிய பிறகு, அதை தூக்கி போடுங்கள்.
புதிய தோலுடன் மீண்டும் மசாஜ் செய்யவும்.
இந்த மசாஜ் செய்து 15 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
CATEGORIES Lifestyle