வன விலங்குகளை கொல்லப்போகும் நமீபியா அரசு

வன விலங்குகளை கொல்லப்போகும் நமீபியா அரசு

தென் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நமீபியாவில் கடந்த அரை நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவுவதனால் பசி பட்டினியால் வாடும் 14 இலட்சம் மக்களுக்கு உணவளிக்க காட்டில் வாழும் வனவிலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உணவாகப் பயன்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

 இதனால் 83 யானைகள் உற்பட 723 வன விலங்குகளை நமீபியா அரசு கொல்வதற்கு முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர்.

தென்னாபிரிக்க நாடுகளில் உள்ள யானைகளின் எண்ணிக்கை கடந்த மூன்று தலைமுறைகளில் பாதியாகக் குறைந்துள்ளதாகவும் 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி யானைகளின் எண்ணிக்கை 227,000-க்கு குறையாமல் அதிகமாய் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கடுமையான வறட்சியினால் உணவுக்காக யானைகள் கொல்லப்படும் சூழ்நிலையில் அவற்றின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

நமீபியா நாட்டின் நிலைமையை “நாங்கள் அதிகம் பேசாத மனிதாபிமான நெருக்கடி” என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின் செய்தித் தொடர்பாளர் வெள்ளிக்கிழமை ஒரு ஊடக மாநாட்டில்  தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )