பட்டுப்போன்ற சருமம் வேண்டுமா ?

பட்டுப்போன்ற சருமம் வேண்டுமா ?

அழகாக இருப்பதற்கு யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் இயற்கையான பொருட்களைக் கொண்டு முகத்தை அழகுபடுத்தும்போது அந்த அழகு நீண்ட காலத்துக்கு நிலைத்து நிற்கும்.

இனி முகத்தை பிரகாசிக்கச் செய்ய அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்காது.

வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே முகத்தை பளபளப்பாக்க முடியும்.

சரி இனி சில அழகுக் குறிப்புக்களை பார்ப்போம்.

  • கற்றாழை ஜெல்லை எடுத்து குளிப்பதற்கு 10 நிமிடங்கள் முன்பு முகத்தில் தடவினால் முகப்பரு குறையும்.

  • வாழைப்பழம், அப்பிள், பப்பாளி போன்ற பழங்களின் தோலை அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

  • பயறு மா, மஞ்சள், தயிர் சேர்த்து முகம், கழுத்து பகுதிகளில் தடவி காயவைத்து கழுவினால், கருமை நிறம் குறையும்.

  • முல்தானி மிட்டியுடன், பப்பாளி சாறு கலந்து முகத்தில் தடவி, காய்ந்ததும் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறிவிடும்.

  • இரண்டு தேக்கரண்டி கடலை மா, ஒரு தேக்கரண்டி தயிர், அரை தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து மிக்ஸியில் அரைத்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவினால் எண்ணெய்ப் பசை குறையும்.

  • பாலை நன்றாகக் காய்ச்சி ஆறவைத்து, பஞ்சை பாலில் நனைத்து முகத்தை துடைத்து வந்தால் முகத்திலிருக்கும் அழுக்கு சுத்தமாகும்.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )