யாழில் உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் போட்டிகள்

யாழில் உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் போட்டிகள்

உலகத் தமிழர் பூப்பந்தாட்ட சங்கத்தினால் இவ் வருடம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள ஒன்பதாவது உலகக் கிண்ணப் பூப்­பந்­தாட்டப் போட்­டிகள் இம் முறை யாழ்ப்பாணத்தில் நடை பெறுகின்றது.

IDMNCன் பிரதான அனுசரனையில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன.

குறித்த போட்டிகள் இன்று (31) ஆரம்பமாகியுள்ள நிலையில் ஓகஸ்ட் 04 திகதி வரை யாழ் பல்கலைக்கழக பூப்பந்தாட்ட உள்ளக விளையாட்டரங்கிலும், கொக்குவில் இந்து கல்லூரி பூப்பந்தாட்ட விளையாட்டரங்கிலும் மற்றும் Jaffna balling centerலும் நடைபெறுகின்றன.

இது குறித்து ஊடக சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த உலக தமிழர் பூப்பந்தாட்ட சங்கத்தின் ஸ்தாபகரான கந்தையா சிங்கம்,

“சுவிட்­சர்­லாந்தில் 2013இல் ஸ்தாபிக்­கப்­பட்ட உலகத் தமிழர் பூப்­பந்­தாட்ட சங்கம் , ஆண்­டு­தோறும் பூப்­பந்­தாட்டப் போட்­டி­களை தமி­ழர்கள் பரந்து வாழும் நாடு­க­ளி­லேயே ­நடத்­தி­வ­ரு­கின்­றது.

குறித்த போட்டிகளை கடந்த பல ஆண்டுகளாக எனது தாய் நாடான இலங்கையில் நடத்த முயற்சித்த போதிலும் பல காரணங்களால் அதனை நடத்த முடியவில்லை. இம்முறை அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

குறித்த போட்டிகள் யாழ் பல்கலைக்கழக பூப்பந்தாட்ட உள்ளக விளையாட்டரங்கிலும், கொக்குவில் இந்து கல்லூரி பூப்பந்தாட்ட விளையாட்டரங்கிலும் மற்றும் Jaffna balling centerலும் இன்று (31) முதல் ஒகஸ்ட் 4 ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது. எனவே அனைவரும் வருகை தந்து எம்மவர்களின் ஆளுமையை காண வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )