விசேட சலுகை விலையில் உணவுப் பொருட்கள் – சதொச

விசேட சலுகை விலையில் உணவுப் பொருட்கள் – சதொச

எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு நுகர்வோருக்கு பொருட்களை சலுகை விலையில் வழங்குவதற்கு சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதான நிகழ்வுகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதற்கமைய அந்தந்தப் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தானசாலைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களுக்கான முன்பதிவுகளை பதிவு செய்யுமாறு சதொச நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இதன்படி இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )