அமெரிக்க பிரதிநிதி இலங்கைக்கு வருகை
தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க இராஜாங்க உதவிச்செயலர் டொனால்ட் லூ, இன்று (13) காலை இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துடன் இந்திய – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.
இம்மாதம் 10 – 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியா, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு டொனால்ட் லூ சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவை கடந்த வெள்ளிக்கிழமை (10) சென்றடைந்த டொனால்ட் லூ, சென்னையில் கொன்சியூலர் அதிகாரியுடன் சந்திப்பை முன்னெடுத்திருந்தார்.
இதனையடுத்து இலங்கையை வந்தடைந்துள்ள அவர், கொழும்பில் உயர்மட்ட அரசியல் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.