நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்

நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்

உலக அளவில் பரப்பளவில் மிகப்பெரிய நாடு ரஷ்யா தான். 1990 களில் இருந்தே ரஷ்யாவில் பிறப்பு விகிதம் சரிந்து வருகிறது. இது ஒருபக்கம் என்றால் போர் உள்ளிட்ட காரணங்களால் அந்நாட்டில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

2 ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரேன் போரில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யா நடத்தும் உக்ரேன் போருக்கு வீரர்களே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் நிலைமை மோசமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதால் வரும் காலங்களில் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால், ரஷ்ய ஜனாதிபதி புதின் அந்த நாட்டு மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் ரஷ்யாவில் குறைந்து வரும் பிறப்பு விகிதம் குறித்து புதின் கவலை அடைந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

“உக்ரேனுடன் நடந்து வரும் போரின் காரணமாக நாட்டின் மக்கள் தொகை குறைந்துள்ளது. இது தேசத்தின் எதிர்காலத்திற்கு பேரழிவு. வேலையில் மிகவும் பிசியாக இருப்பது சரியான காரணம் அல்ல. இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது.

வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புதின் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவில், 2023 ஜன., 1 நிலவரப்படி, 14.64 கோடி மக்கள் தொகை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )