டி20-யிலும் ஓய்வு அறிவித்தார் ஷகிப் அல் ஹசன்

டி20-யிலும் ஓய்வு அறிவித்தார் ஷகிப் அல் ஹசன்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஷகிப் அல் ஹசன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்த ஷகிப் தற்போது டி20 கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஷகிப் அல் ஹசன் தனது கடைசி டி20 போட்டியில் விளையாடினார். இதுவரை பங்களாதேஷின் கிரிக்கெட் அணிக்காக 129 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள ஷகிப், அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

37 வயதான ஷகிப் அல் ஹசன் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் அடுத்த மாதம் விளையாடவுள்ளதுடன் இந்த போட்டி பங்களாதேஷின் மிர்பூரில் உள்ள பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )