உடல் நலனை காக்கும் வெந்தய் கீரை கட்லட்
வெந்தயக் கீரையில், விட்டமின் ஏ,பி,சி, புரதம், சுண்ணாம்புச் சத்து போன்றவை அதிகளவில் உள்ளன.
மேலும் இது உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து வயிறு கோளாறுகளையும் சரி செய்யும்.
இக் கீரை சற்று கசப்பான ருசியைத் தந்தாலும் உடலுக்கு நன்மையளிக்கும்.
தேவையான பொருட்கள்
- வெந்தயக் கீரை – ஒரு கட்டு
- கடலை மா – 100 கிராம்
- மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
- மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
- கோதுமை மா – 100 கிராம்
- தயிர் – 3 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2
- எலுமிச்சைச் சாறு – ஒரு தேக்கரண்டி
- இஞ்சி – சிறிய துண்டு
- சீனி – ஒரு தேக்கரண்டி
- நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
தாளிக்க
- நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
- தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1 தேக்கரண்டி
செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மா, கடலை மா, வெந்தயக் கீரை, தயிர், எலுமிச்சைச் சாறு, எண்ணெய், உப்பு, சீனி போன்றவற்றை கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின் பச்சை மிளகாய், இஞ்சி இரண்டையும் அரைத்து இக் கலவையில் சேர்க்க வேண்டும்.
சிறிதளவு நீர் விட்டு நன்றாக பிசைந்து கட்லட் வடிவத்தில் தயார் செய்து கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகை தாளித்து தேங்காய் துருவல் சேர்த்து கலக்க வேண்டும்.
பின் வேகவைத்துள்ள கட்லட்டுக்களை அதில் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இலேசாக பொரித்து எடுக்கவும்.