ஆட்சிபீடமேறிய பின்னர் ஆரம்பகாலம் இன்பமாகவே இருக்கும்

ஆட்சிபீடமேறிய பின்னர் ஆரம்பகாலம் இன்பமாகவே இருக்கும்

சர்வதேச சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றாது, ஒற்றையாட்சியை பாதுகாத்தப்படி தேசிய மக்கள் சக்தி பயணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான முன்னாள் எம்.பி. விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ கட்சியொன்று ஆட்சிபீடமேறிய பின்னர் ஆரம்பகாலம் என்பது இன்பமாகவே இருக்கும். கோட்டாபய ராஜபக்ச ஆட்சிகாலத்திலும் ஆரம்பகாலம் என்பது சுவையானதாக இருந்தது. நாட்கள் செல்ல செல்லத்தான் உண்மையான முகம் எது என்பதை அறிந்துகொள்ள முடியும்.

நாட்டுக்கும், மக்களுக்கும் தவறிழைக்காது, பிரிவினைவாதத்துக்கு கப்பம் வழங்காது, வெளிநாட்டு சக்திகளின் தேவைக்கேற்ப செயற்படாது, நாட்டின் இறையாண்மை மற்றும் ஒற்றையாட்சியை பாதுகாத்து பயணித்தால் எவ்வித பிரச்சினையும் இருக்காது. இதற்கு நாட்டு மக்களும் ஆணை வழங்குவார்கள்.

அதேவேளை பொதுத்தேர்தலில் சர்வஜன பலவேகய கட்சியின் சார்பிலேயே நாம் போட்டியிடுவோம். எதிரணிகளுக்கிடையில் கொள்கை ரீதியிலான முரண்பாடுகள் உள்ளன. எனவே, எதிரணி கூட்டணி என்பது சாத்தியப்பட மாட்டாது.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )