தரம் ஐந்து புலமைப் பரிசில் வினாத்தாள் கசிவு ; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்த சம்பவம் தொடர்பில், மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் சம்பந்தப்பட்ட பாடசாலை ஆசிரியர் ஆகியோரை,எதிர்வரும் (22) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்விருவரும் கடுவெல மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராக்கப்பட்டனர். இதன்போதே ,இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இப்பரீட்சையின் வினாத்தாள்களை வெளியிட்டமை தொடர்பில் மேற்படி இருவருக்கும் எதிராக குற்றம் சுமத் தப்பட்டிருந்தது.
விசாரணைகள் முடிவடையும் வரை,பரீட்சை விவகாரம் தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாமென,மனித உரிமைகள் ஆணைக்குழுவானது
கல்வியமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்திடம் கேட்டுள்ளது.
மேற்படி விடயம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் கடந்த மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
எவ்வாறாயினும் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தை கல்வியமைச்சு எடுத்துள்ள நிலையில் சர்ச்சைக்குரிய
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் என சில பெற்றோர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.