இலங்கை – ரஷ்யா சுங்க நடவடிக்கை ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி
இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கும் இடையிலான சுங்க நடவடிக்கைகள் தொடர்பான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிர்வாக உதவிகளைப் பெற்றுக் கொள்கின்ற ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
இலங்கை அரசுக்கும் ரஷ்யா அரசுக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைத் தொடரின் பின்னர் வெளிப்படையானதும் ஊகிக்கக் கூடிய சுங்க நடவடிக்கையின் மூலம் சட்ட ரீதியான வர்த்தக நடவடிக்கைகளுக்காக வசதிகளை வழங்குவதற்காக இருதரப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு 2021.11.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பினும், குறித்த ஒப்பந்தத்தில் இதுவரை கையொப்பமிடப்படவில்லை.
இருநாடுகளுக்கிடையில் காணப்படும் வர்த்தகத் தொடர்புகள் மூலம் உரித்தாகின்ற நன்மைகள் மற்றும் இருதரப்பு சுங்க ஒத்துழைப்புக்களில் மேலெழுந்து வரும் போக்குகளைக் கருத்தில் கொண்டு, குறித்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.