சட்டம் சகலருக்கும் சமமாக இருந்திருந்தால் ரணில் நீதிமன்றுக்கு செல்ல நேர்ந்திருக்கும்!

சட்டம் சகலருக்கும் சமமாக இருந்திருந்தால் ரணில் நீதிமன்றுக்கு செல்ல நேர்ந்திருக்கும்!

சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தின் முன் செல்ல நேர்ந்திருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘முதலீட்டின் ஊடான வருவாய் குறைந்த மட்டத்திலேயே எம்முடைய நாட்டுக்கு கிடைக்கப்பெறுகின்றது.

ஊழல் மோசடிகள் மிகுந்து காணப்படுகின்றமையினால் முதலீடுகளை மேற்கொள்ள முதலீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

ஆகவே ஊழல் மோசடிகளை யாருடைய ஆட்சியில் இல்லாதொழிக்க முடியும்.
சஜித் பிரேமதாஸவும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பதாக கூறுகின்றனார்.

கிரியெல்ல, சுஜீவ சேமசிங்க போன்றோரை அருகில் வைத்துக்கொண்டு எவ்வாறு அவர்
ஊழல் மோசடிகளை இல்லாதொழிப்பார் என கேட்க விரும்புகின்றேன்.

அதேபோன்று எம்முடைய நாட்டில் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.

செல்வந்தர்களுக்கு ஒரு விதமாகவும், சாதாரண மக்களுக்கு ஒரு விதமாகவும் நடை
முறைப்படுத்தப்படுகின்றது.

சட்டம் சமமாக நடை முறைப்படுத்தப்பட்டிருந்தால் ஜனாதிபதி ரணில் விக்கிரம
சிங்க தற்போது நீதிமன்றத்தின் முன் நின்றிருப்பார்.

மகிந்தானந்த, பிரசன்ன ரணதுங்க போன்றோர் பாராளுமன்றத்துக்கு வருகை தரமுடியாத நிலையே ஏற்படும்.

ஆகவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் சட்டம் அனைவருக்கும் சமமாக
நடைமுறைப்படுத்தப்படும்’ என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )