கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ; சந்தேக நபர் கைது
பியகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வானை பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மல்வானை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொலை செய்யப்பட்டவருக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
CATEGORIES Sri Lanka