எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று !
எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
இன்றைய தினம் அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி வாக்களிக்க முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சிகளும் 2 சுயேட்சைக் குழுக்களும் எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்தியிருந்தன.
எனினும் அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் தங்களது வேட்புமனுக்களைச் சமர்ப்பித்துள்ளன.
எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல்களுக்கான உத்தியோகப்பூர்வ வாக்காளர் அட்டைகள் கடந்த சனிக்கிழமை அஞ்சல் நிலையங்களில் கையளிக்கப்பட்டன.
அவை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.