அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வழங்க விசேட குழு நியமனம்
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தட்டுப்பாடின்றி சந்தைக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கும், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை இயன்றளவு கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதற்கும், அனைத்து தரப்பினருடனும் ஒருங்கிணைப்பு அணுகுமுறையை பின்பற்றி பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்ளவும் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் 2022.10.03 திகதி அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்ட உணவுக் கொள்கை குழுவை பின்வரும் அலுவலர்களை உள்ளடக்கி மீள நிறுவுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
1. ஜனாதிபதியின் செயலாளர் – (தலைவர்)
2. பிரதமரின் செயலாளர்
3. செயலாளர் – நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுப்பு, திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
4. செயலாளர் – வலுசக்தி அமைச்சு
5. செயலாளர் – விவசாய, காணி, கால்நடை வள, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு
6. செயலாளர் – நீதி, பொது நிரவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்;ராட்சி மற்றும் தொழில் அமைச்சு
7. செயலாளர் – வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு
8. செயலாளர் – சுகாதார அமைச்சு
9. செயலாளர் – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு
10. செயலாளர் – சுற்றாடல், வனஜீவராசிகள், வனவள மற்றும் நீர் வழங்கல், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு