வியாழன் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா ?

வியாழன் கிரகத்தில் உயிர் வாழ முடியுமா ?

பூமியை தவிர வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ முடியுமா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் வியாழன் கிரகத்தின் நிலவுக்கு விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா அனுப்பியுள்ளது. சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் (ஜுபிட்டர்) கிரகத்தை 95 நிலவுகள் சுற்றி வருகின்றன.

இதில் 4-வது மிகப்பெரிய நிலவு யுரோப்பா என்று அழைக்கப்படுகிறது. யுரோப்பா நிலவில் 15 முதல் 25 கி.மீ. தடிமன் கொண்ட பனிக்கட்டி படலம் உள்ளது.

இந்த படலத்திற்கு அடியில் மிகப்பெரிய உப்புத் தண்ணீர் கடல் உள்ளது. அந்த தண்ணீரில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள யுரோப்பா கிளிப்பர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது.

சுமார் 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 62 கோடியே 82 லட்சம் கி.மீ. தூரம் பயணித்து 2030-ம் ஆண்டு யுரோப்பாவின் சுற்றுப் பாதையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )