உதய கம்மன்பிலவுக்கு காலக்கெடு
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில்
அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத்
தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே
இவ்வாறு குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இன்னமும் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் ஒரு வாரகாலத்திற்குள் அரசாங்கம் வெளியிடவேண்டும் எனவும் இல்லாவிட்டால் அவற்றை இணையவழியில் தான் வெளியிடப்போவதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அறிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்
இந்த அறிக்கைகள் எவையும் காணாமல்போகவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
உதய கம்மன்பிலவிடம் இருக்கும் அறிக்கையை அரசாங்கத்திடம் கையளிக்கவேண்டும். அத்துடன், அது எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்படும். அத்துடன், இவ்வளவு நாட்களாக அதனை ஏன், வெளியிடாமல் வைத்திருந்தார் என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ள விஜித ஹேரத், தமது அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு விசாரணைகளும் மூடி மறைக்கப்படாது என்றார்.