தேர்தல் மூலம் 100 கோடி ரூபாய் வருமானம் ; தனியார் பஸ் உரிமையாளர்கள் மகிழ்ச்சி

தேர்தல் மூலம் 100 கோடி ரூபாய் வருமானம் ; தனியார் பஸ் உரிமையாளர்கள் மகிழ்ச்சி

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நேற்று (18) இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஈடுபட்டனர்.

பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க ஆகியோர் கொழும்பை மையப்படுத்தி தமது பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்தனர்.

இந்தக் கூட்டங்களுக்கு நாடு முழுவதும் இருந்து ஆதரவாளர்ளை அழைத்து வர குறித்த மூன்று வேட்பாளர்களும் தனியார் பஸ்களை முன்பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன, “இவ்வருட ஜனாதிபதித் தேர்தலின் பிரசாரக் கூட்டங்களுக்காக 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை பஸ்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

100 கோடி ரூபாய் வரை தனியார் பஸ்கள் இலாபம் அடைந்துள்ளன. இறுதிக் கூட்டத்துக்கு தமது ஆதரவாளர்களை அழைத்து வர 1500 பஸ்கள் முன்பதிவு செய்யப்பட்டன.

தேசிய மக்கள் சக்தியால் அதிகூடிய பஸ்கள் பெறப்பட்டன. இதேவேளை, இலங்கை முழுவதும் தேர்தல் கடமைகளுக்காக கிட்டத்தட்ட 500 பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 20ஆம் திகதி நாடு முழுவதும் 50 வீதமான பஸ்கள் இயக்கப்படும். தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி 10 முதல் 15 வரை பஸ்கள் இயக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )