நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைப்பு

நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் பிரகாரம் இந்த கட்டண குறைப்பு அமுல்படுத்தப்படும் என சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்,  “இன்று (30) நள்ளிரவில்  டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணக் குறைப்பு பாதிக்கப்படாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த 5.27% பேருந்துக் கட்டணக் குறைப்புக்கு நாங்கள் உடன்படுகிறோம் என்பதை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 

அரசாங்கம் சில சுற்றறிக்கைகளை கொண்டு வந்து இந்த போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றியுள்ளது. எனினும் எங்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளை அரசாங்கம் முடக்குவதற்கு முயற்சித்தால், நாங்கள் அதற்காக தயங்க மாட்டோம் என தௌிவாக கூறிக்கொள்கின்றோம்.

“நாங்கள் இந்நேரத்தில் மக்களிடம் ஒரு விசேட வேண்டுகோளை விடுக்கிறோம்.  இன்று நள்ளிரவு முதல் பேருந்துக் கட்டணக் குறைப்பின் 100% பலனைப் பெற வேண்டுமானால், பயணிகள் கட்டாயமாக பணத்தினை சில்லரை நாணயங்களாக மாற்றி கொண்டு வர வேண்டும். ஏன் என்றால் 30 ரூபாயாக இருந்த பேருந்து  கட்டணம், 28 ரூபாயாக மாற்றப்படுவதால், எஞ்சிய இரண்டு ரூபாய்க்கு சிக்கல் நிலை ஏற்படும்.

மேலும், வெவ்வேறு பேருந்து கட்டணத்தின் போது இந்த இரண்டு, மூன்று மற்றும் ஐந்து ரூபாய் போன்ற நாணயங்களை மாற்றுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )