ஹமாஸ் தலைவர் சின்வாரின் மரணத்தின் பின்னரும் போரைத் தொடர இஸ்ரேல் உறுதி !
காசாவின் தெற்கு நகரான ரபாவில் இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அரசு மற்றும் இராணுவம் கடந்த வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது.
இஸ்ரேலின் இந்த அறிவிப்புத் தொடர்பில் ஹமாஸ் அமைப்பு உடனடியாக எதனையும் கூறா போதிலும் நேற்று அதனை உறுப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிரான போரைத்தீவிரப்படுத்துவதாக ஹிஸ்புல்லா
அமைப்பு தெரிவித்திருப்பதோடு ‘எதிர்ப்புப் போராட்ட உணர்வு வலுப்பெறும்’ என்று ஈரான் தெரிவித்துள்ளது.
காசாவில் போரைத் தூண்டிய கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெற்ற இஸ்ரேல் மீதான பலஸ்தீன போராளிகளின் தாக்குதலுக்கு மூளையாகச் செயற்பட்டவர் என பரவலாக நம்பப்படும் சின்வார் கடந்த புதனன்று இடம்பெற்ற இராணுவ
நடவடிக்கையில் கொல்லப்பட்டதாகவும், அவரது மரணம் டி.என்.ஏ.சோதனை மூலம் உறுதி செய்யப்பட்ட தாகவும் இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
இதில் சம்பவ இடத்தில் பிடிக்கப்பட்டதாக இஸ்ரேல் வெளியிட்ட படம் ஒன்றில், சின்வார் போர் உடைய அணிந்து கட்டட இடிபாடுகளுக்கு இடையே இருக்கை ஒன்றில்
இறந்த நிலையில் இருப்பது பதிவாகியுள்ளது.
அந்தக் கட்டடம் செல்குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது.
சின்வாரின் மரணம் போரை முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக மேற்குலக தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்ட போதும், ஹமாஸ் பிடியில் இருக்கும் பணயக்கைதிகள் திரும்பும் வரை போர் தொடரும் என்று இஸ்ரேல் பிர
தமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
‘இன்று நாம் இலக்கை எட்டிவிட்டோம். தீய சக்தி முறியடிக்கப்பட்ட போதும் எமது இலக்கு இன்னும் பூர்த்தியாகவில்லை’ என்று சின்வாரின் மரணத்தை உறுதி செய்து பதிவு செய்யப்பட்ட வீடியோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட நெதன்யாகு குறிப்பிட்டார்.
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே கடந்த ஜூலையில் தெஹ்ரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்தே ஹமாஸின் ஒட்டுமொத்தத் தலைவராக சின்வார் நியமிக்கப்பட்டார்.
அவர் காசாவில் ஹமாஸ் அமைப்பு கடந்த இரண்டு தசாப்தங்களில் அமைத்திருக்கும் சுரங்கக் கட்டமைப்பில் மறைந்திருப்பதாக நம்பப்பட்டது.
இந்நிலையில் தெற்கு காசாவில் இஸ்ரேலியத் துருப்புகள் வழக்கமான படை நடவடிக்கையின்போது, தாம் இலக்கு வைப்பது சின்வார் என்று தெரியாத நிலையிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார் என்று இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹமாஸ் இது தொடர்பில் உடன் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாதபோதும், இஸ்ரேலிய துருப்புகளால் சின்வார் கொல்லப்பட்டிக்கலாம் என்று ஹமாஸ் வட்டாரங்கள் கூறியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
யஹ்யா சின்வார் காசாவின் கான் யூனிஸில் உள்ள அகதி முகாமில் 1962 ஆம் ஆண்டு
பிறந்த சின்வாருக்கு ஐந்து வயது இருக்கும்போதே 1967 மத்திய கிழக்குப் போரில் காசா பகுதியை எகிப்திடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றியது.
1948 இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு அகதிகளாக்கப்பட்ட 700,000க்கும் அதிகமான பலஸ்தீனர்களில் சின்வாரின் குடும்பத்தினர் உள்ளனர்.
அவரது குடும்பம் காசாவின் வடக்கு எல்லைக்கு அருகில் இருக்கும் தற்போது அஷ்கெ
லோன் என்று அறியப்படும் நகரில் இருந்து அகதிகளாக்கப்பட்டவர்களாவர்.
தனது 20 வயதுகளில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த நான்கு பலஸ்தீனர்களை கொன்ற தாக குற்றங்காணப்பட்டார்.
22 ஆண்டுகள் சிறை அனுபவித்த அவர் அங்கு ஹிப்ரு மொழியை கற்றதோடு எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்ற உபாயங்களையும் தெரிந்துகொண்டார்.
அவர் சிறையிலிருந்த காலத்தில் அவரது மருத்துவ பதிவுகள் மற்றும் டி.என்.ஏ.
மாதிரிகளை இஸ்ரேலால் பெற முடிந்தது.
இது அவரை அடையாளம் காண இஸ்ரேலுக்கு உதவியுள்ளது.
2011இல் ஒரே ஒரு இஸ்ரேலிய வீரரான கிளாட் ஷலிட்டை விடுவிப்பதற்கு பகரமாக 1,000க்கும் அதிகமான பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்ட போது சின்வார் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுதலை பெற்றார்.
கடந்த புதன்கிழமை ரபாவில் நடத்திய தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் கொல்லப்பட்டவர்கள் மீது டி.என்.ஏ. சோதனை மேற்கொண்ட போதே
சின்வார் அடையாளம் காணப்பட்டிருப்பதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம்
குறிப்பிட்டுள்ளது.
சின்வாரின் மரணத்தை அடுத்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன்,
சின்வாரின் மரணம் காசா போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பணயக்கைதிகளை மீட்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் முன்மொழிவுகளை ஆரம்பிக்க அமெரிக்கா விரும்புவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்
சாளர் மத்தியூ மில்லர் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பிரதான இடையூறாக சின்வார் இருந்தாகவும் அவர் குறிப்பிட்டார்.
காசாவில் தொடர்ந்து 101 பணயக்கைதிகள் எஞ்சி இருப்பதாக நம்பப்படும் நிலையில் அவர்களின் உறவினர்கள் கடந்த வியாழக்கிழமை இரவும் டெல் அவிவில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்பாடு ஒன்றுக்கு வருவதற்கு இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுத்து கடந்த ஓர் ஆண்டாக இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் கடந்த இரு வாரங்களாக வடக்கு காசாவை முற்றுகை செய்திருக்கும் இஸ்ரேலிய இராணுவம் கடந்த வியாழன் இரவு தொடக்கம் நடத்திய கடுமையான தாக்குதல்களில் மேலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா நகரின் வடமேற்கே அல் நாசிர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அடுத்து சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக பலஸ்தீன செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.
பிறிதொரு சம்பவத்தில் காசாவின் தென்மேற்கே இஸ்ரேலியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இரு பலஸ்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி
நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
மத்திய காசாவின் மகாசி அகதி முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 10 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள்
தெரிவிக்கின்றன.
கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக காசாவில் இஸ்ரேல் இடைவிடாது நடத்தும் தாக்
குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 42,500ஐ நெருங்கி இருப்பதோடு காயமடைந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கி இருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளுக்கான ஈரான் தூதரகம் சின்வாரை ‘உயிர் தியாகி’ என்று குறிப்பிட்டுள்ளது.
‘போர் உடையில்,திறந்த வெளியில், மறைவிடத்தில் அன்றி, எதிரியை எதிர்கொண்டு,
போர்க்களத்தில் நிற்கும் தியாகி சின்வாரை முஸ்லிம்கள் பார்க்கும் போது எதிர்ப்புப் போராட்ட உணர்வு வலுப்பெறும்’ என்று தூதரகம் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பும், ‘இஸ்ரேலுடன் புதிய மற்றும் தீவிர மோதல்’ ஒன்றுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது.
லெபனானிலும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருவதோடு தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தரைப்படை ஹிஸ்புல்லா போராளிகளுடன் சண்டையிட்டு வருகிறது.
இந்த மோதல்களில் ஐந்து இஸ்ரேலியப் படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் இராணுவ அதிகாரி ஒருவரும் உள்ளார்.
மறுபுறம் லெபனானுக்குள் தற்போது இடம்பெற்றுவரும் மோதல்களில் சுமார் 55 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு டெலிகிராமில் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இதில் மேலும் 500 இஸ்ரேலிய படையினர் காயமடைந்தும் 20 மெர்காவா டாங்கிகள், நான்கு புல்டோசர்கள் அழிக்கப்பட்டும் இருப்பதாக ஹிஸ்புல்லா கூறியது.
மறுபுறம் தெற்கு லெபனானின் தைபி பகுதியில் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஹிஸ்புல்லா தளபாதிகளில் ஒருவரான முஹமது ஹுஸைன் ரமால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. லெபனானின் பல பகுதிகளிலும் இஸ்ரேல் நேற்று
நடத்திய தாக்குதல்களில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.