இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் !

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் !

பாலஸ்தீனம் மீதும் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இரு நாடுகளில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளின் தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ளனர்.

தற்போது இஸ்ரேல் படைகளுடன் லெபனான் எல்லையில் சண்டையிட்டு வரும் ஹிஸ்புல்லா இஸ்ரேலின் உட்புற பகுதிகள் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த வகையில் இன்றைய தினம் லெபனானில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் குடியிருப்பு அமைந்துள்ள செசாரியா [Caesarea] நகரின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.

இதனால் செசாரியா பகுதியில் நெதன்யாகு இல்லம் அமைத்துள்ள இடத்தின் அருகே உள்ள கட்டிடத்தின் மீது லெபனான் ட்ரோன் தாக்கியதாகவும் இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.

தாக்குதல் நடத்த சமயத்தில் நேதன்யாகு அந்த இல்லத்தில் இருந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை

மேலும் தலைநகர் டெல் அவிவ் நகருக்கு வடக்கே உலா கிலோட் பகுதியில் இரண்டு ட்ரோன்கள் பறந்ததாவும் அதை அழித்ததாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலைக்கு பின்னர் புதிய மற்றும் அடுத்த கட்ட போருக்கு தாங்கள் தயாராக உள்ளதாக ஹிஸ்புல்லா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )