தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான கால அவகாசம் நீடிப்பு

தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான கால அவகாசம் நீடிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டடோர் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய இம்மாதம் 30ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதற்கான விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகவும் எவ்வாறாயினும், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைகளை கருத்திற் கொண்டு விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )